கொழும்பு தாமரைக் கோபுரம் செல்வோரிற்கு எச்சரிக்கை!
கொழும்பு தாமரை கோபுர சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாமைரை கோபுரத்தை பாரிய சேதங்களை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தாமரை கோபுரத்தை பராமரிப்பதற்கு அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை பாதுகாப்பது மக்களின் பொறுப்பு என அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சேதப்படுத்திய பலரை அடையாளம் கண்டுள்ளதாகவும் இனிமேல் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என கொழும்பு தாமரை கோபுரம் தனியார் நிறுவனத்தின் வர்த்தக நிறைவேற்று அதிகாரி பிம்சர ரொசைரோ இதனைத் தெரிவித்தார்.
அவ்வாறான செயல்களைச் செய்த மூன்று பேரை இங்குள்ள பொலிஸ் பிரிவில் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.