சமூக ஊடகங்களில் குறித்து எச்சரிக்கை!
போலியான விலை மனுகோரல் பத்திரமொன்று (டெண்டர்) சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
1,121 வாகனங்கள் ஏல விற்பனை
துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 1,121 வாகனங்களை ஏல விற்பனை செய்வதற்கான போலியான விலை மனுகோரல் தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது.
அவ்வாறான எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்வதற்கான விலை மனுகோரல் பத்திரம் விடுவிக்கப்படவில்லை என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
அதோடு அந்த ஆவணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காகிதத் தலைப்பு (லெட்டர் ஹெட்) போலியானதொன்றாகும்.
மேலும் , அவ்வாறு கையொப்பமிடப்பட்ட நபர் அத்தகைய ஆவணத்தில் கையொப்பம் இடவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.