மகாவலி நீர்மட்டம் உயரும் சாத்தியம் ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நிலவும் மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாய ஆரம்பித்துள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதனை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அந்த அதிகாரசபை அறிவித்துள்ளது.

மேலும், கலாவெவ வடிநிலத்திற்குட்பட்ட கலாவெவ மற்றும் கந்தளாய் நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாய்ந்து வருவதாகவும், போவதென்ன, இப்பன்கட்டுவ, மொரகஹகந்த மற்றும் களு கங்கை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகபட்ச மட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மாதுரு ஓயா நீர்த்தேக்கமும் அதிகபட்ச நீர்மட்டத்தில் உள்ளதால், அந்த நீர்த்தேக்கமும் விரைவில் வான் பாயக்கூடும் என மகாவலி அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.