தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் சாரதிகள் மீது அநீதி செய்யப்பட்டால், சில தொடருந்து பாதைகளில் சேவையில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக தொடருந்து சாரதிகள் சங்கம் எச்சரிகை விடுத்துள்ளது.
மட்டக்களப்பு-கொழும்பு ரயில் பாதையில் இயங்கும் மீனகயா தொடருந்து அண்மையில் கல்லோயா பகுதியில் காட்டு யானைகளை மோதியதில் ஐந்து யானைகள் உயிரிழந்தன.
இந்த சம்பவத்தையடுத்து, குறித்த தொடருந்து சாரதிக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தொடருந்து சாரதிகள் சங்கம், குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், மஹவ-கல்லோயா, கல்லோயா-திருகோணமலை போன்ற காட்டுயானைகள் அதிகமாக உலவும் பாதைகளில் சேவையில் ஈடுபட முடியாது என எச்சரித்துள்ளது.
மேலும், யானைகள் மோதலைத் தடுக்க விஞ்ஞானபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், தொடருந்து சாரதிகளை மட்டும் பழிசொல்வது நியாயமானது அல்ல என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.