இலங்கை மின்சார சபை விடுத்த எச்சரிக்கை

Yadu
Report this article
கடும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தியை சுமார் நான்கு வாரங்களுக்கு குறுகிய காலத்திற்கு தொடரலாம் என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது.
நீர் மின் உற்பத்தி 15 சதவீதமாக குறைந்துள்ளதாக அங்குள்ள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமனல ஏரி நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 1 வீதமாகவும், காசலரி நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 28 வீதமாகவும், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 35 வீதமாகவும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 25 வீதமாகவும் இந்த வார இறுதியில் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி மேலும் உற்பத்தி செய்யக்கூடிய நீர்மின்சாரம் 300 ஜிகாவாட் மணிநேரம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அனல் மின் நிலையங்கள் மின் உற்பத்தியை 65 சதவீதமாகவும், சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் சுமார் 11 சதவீத மின் உற்பத்தி திறனையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.