இலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு!
இலங்கையில் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொருட்களை வாங்கச் செல்லும் மக்களை இலக்குவைத்து பாவனைக்கு உதவாத பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்விடயம் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் வர்த்தக நிலையங்களில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாவனைக்குதவாத வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மற்றும் உருளைக்கிழங்கு ஆகியன இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, முட்டைக்கு 44 ரூபாய் நிர்ணய விலையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.