சமூக ஊடகங்களில் வெளியாகும் போலியான பதிவுகள் குறித்து எச்சரிக்கை!
தொழிலாளர் துறையால் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்புகள் நடத்தப்பட்டதாகக் கூறும் சமூக ஊடகப் பதிவுகளை தொழில் திணைக்களம் மறுத்துள்ளது. தொழில் திணைக்களத்தினால் அல்லது அதன் அதிகாரத்தின் கீழ் உள்ள எந்தவொரு நிறுவனத்தினாலும் தற்போது எந்தப் பதவிகளுக்கும் ஆட்சேர்ப்பு செய்யவில்லை என திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மோசடியான பதிவுகளுக்கு பதிலளிக்கவோ அல்லது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளவோ வேண்டாம் என்று பொதுமக்களை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மோசடி நடவடிக்கை
இந்த மோசடிக்குப் பின்னால் இருப்பவர்களை அடையாளம் காண விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது அவர் தெரிவித்தார்.
கூடுதலாக, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்கள் (OTP), வங்கிக் கணக்கு விவரங்கள், தொலைபேசி எண்கள் அல்லது வேறு எந்த தனிப்பட்ட தகவலையும் வெளி நபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் இதன் போது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்தத் திட்டம் தனிப்பட்ட தரவுகளைச் சேகரிப்பதற்காக மட்டுமே என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.