சவூதியில் போர் பதற்றம் ; இண்டிகோ விமான சேவைகள் ரத்து
சவூதியில் நிலவிவரும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில்கொண்டு சவூதியின் முக்கிய நகரங்களுக்கான விமான சேவைகளை இண்டிகோ இடைநிறுத்தியுள்ளது.
இதன்படி, ரியாத், ஜித்தா,தம்மாம் மற்றும் மதீனா நகரங்களுக்கான விமானச் சேவைகளை ஒக்டோபர் 17 வரை இரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியாத், ஜித்தா,தம்மாம் மற்றும் மதீனா விமானச் சேவை ரத்து
பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அவசர முடிவை எடுத்ததாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பயணிகள் விமான நிலையங்களுக்கு செல்வதற்கு முன்பு, இணையத்தில் தங்களது விமான நிலையை சரிபார்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
எந்தவொரு கேள்விகளுக்கும் அல்லது சந்தேகங்களுக்கும் உதவ எங்கள் குழுக்கள் தயாராக உள்ளன எனவும் தெரிவித்துள்ளது.