தொப்பையை குறைக்க வேண்டுமா இதை செய்யுங்கள்
உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால் அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது.
உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும்.
எடை அதிகரிப்பதற்கு உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது.
எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு.
உடல் எடை
பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்க பல்வேறு பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
உடல் எடையை குறைக்க மக்கள் கடுமையான உணவு முறைகளையும் பின்பற்றுகிறார்கள். ஆனால் பல சமயங்களில் எளிய வீட்டு வைத்தியங்களே எடை குறைப்பதில் நல்ல பலன்களை அளிக்கின்றன.
சிறிய முயற்சி செய்து தினசரி ஒரு கிலோ எடையை எளிதாகக் குறைக்கலாம். உடல் எடை குறைப்பு பற்றிய சில அறிக்கைகளில் இந்த முறை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எடை இழப்பு முயற்சியில் லெமனேட் ஃபாஸ்ட் டயட் உதவும் என அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் எடை இழப்பு இலக்கை நீங்கள் அடைந்தவுடன் இந்த டயட்டைப் பின்பற்றுவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஒரு நாளில் 1 கிலோ எடை குறைப்பது எப்படி
எலுமிச்சை உடலில் இருந்து கொழுப்பை வேகமாக எரிக்க உதவுவதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால், எலுமிச்சை நீருடன் ஃபாஸ்ட் டயட்டை பின்பற்றலாம்.
இது மாஸ்டர் க்ளீன்ஸ் லெமனேட் டயட் என்றும் அழைக்கப்படுகிறது. இது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றது.
லெமனேட் டயட் செய்முறை:
இந்த டயட்டில் குறிப்பிட்ட கால இடைவெளியில் 4 கிளாஸ் எலுமிச்சைப் பழ நீரை தொடர்ந்து குடித்து வர வேண்டும். டயட்டுடன் சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
லெமனேடை வீட்டிலேயே தயாரிக்க வேண்டும். எலுமிச்சை நீர் தயாரிக்கும்போது அதில் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்துங்கள். இது ஒரு நச்சுநீக்கி பானமாகும். இது உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்ற உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
லெமனேட் டயட் செய்முறையை: எப்படி தயாரிப்பது
8 கப் தண்ணீர் 6 எலுமிச்சை 1/2 கப் தேன் சில ஐஸ் கட்டிகள் 10 புதினா இலைகள்
லெமனேட் அல்லது எலுமிச்சம்பழம் மற்றும் தேன் சேர்த்து வேறு ஏதேனும் பானங்களை நீங்கள் தயாரிக்கும் போது கொதித்த சூடான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம்.
இதற்கு வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்தவும்.