சருமம் பளபளக்க வேண்டும்? அப்போ இந்த பழத்தை சாப்பிடுங்கள்
விளாம்பழத்தில் இருக்கும் மிக முக்கியமான பலன்களை அறிந்துக் கொண்டால், எவ்வளவு விலைக்கு விற்றாலும் வாங்கி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்.
விளாம்பழத்தில் அப்படி என்ன நன்மைகள் இருக்கிறது?
விளாம்பழத்தில் உள்ள பலன்களை தெரிந்துக் கொள்வோம் வாங்க..
விளாம்பழத்தில் உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகமாக இருக்கின்றன இதனால் அஜீரண கோளாறைக் குணப்படுத்தும். இவை, எலும்பு, பல்லுக்கு பலம் கொடுப்பதோடு, இளநரையைப் போக்கும் என்பதும் உடலுக்கு வலிமை தரும் என்பதும் தெரியுமா? சித்த மருத்துவத்தில் விளாம்பழம் அதிகம் பயன்படுத்தபடுகிறது.
மேலும், தினசரி ஒரு பழம் விதம் தொடர்ந்து 21 நாட்களுக்கு இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பான தொல்லைகள் அனைத்தும் நீங்கும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, விளாம்பழத்தில் வெல்லம் கலந்து சாப்பிட்டால், நரம்பு தளர்ச்சி, பித்தம், கால்சியம் குறைபாடு, என பல நோய்கள் குணமடையும். விளாம்பழத்தை முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால், முகம் பளபளக்கும். உடல் வறட்சி உள்ளவர்கள் தொடர்ந்து விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தால், சருமம் மின்னும்.