பணம் அதிகமாக வந்து சேர வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்!
நாம் வாழும் இந்த உலகில் பணம் தான் அனைத்திற்கும் பிரதானமாக மாறிவிட்டது. அந்த பணம் நம்மிடம் அதிகம் சேர முயற்சிக்க வேண்டும். அதற்காக முற்காலத்தில் வாழ்ந்த ஆன்மீகப் பெரியோர்கள் நம்மிடம் பணம் அதிகம் சேர்வதற்குரிய சில எளிய தாந்திரிக குறிப்புகளை கூறியுள்ளனர்.
தாந்திரிக குறிப்புகள்
பணத்தைப் பிறருக்கு கொடுக்கும் பொழுது அந்தப் பணத்தின் தலைப்பகுதி நம் உள்ளங்கையை நோக்கியவாறு வைத்து பிறருக்கு கொடுக்க வேண்டும்.
வீட்டில் இருந்து பிறருக்கு பணம் கொடுப்பதாக இருந்தால் பணத்தை வாங்குகின்ற நபரை வீட்டின் தலைவாசல் படி கடந்து வீட்டிற்குள் அழைத்து தான் கொடுக்க வேண்டும்.
வீட்டின் முற்றத்திலோ அல்லது வீட்டின் வெளிப்பகுதியிலோ பணத்தை பிறருக்கு தானமாகவோ, கடனாகவோ கொடுக்க கூடாது.
பொதுவாக நம் பணத்தை பிறருக்கு கொடுக்கும் பொழுது அந்த பணத்தை வாழ்த்தி கொடுக்க வேண்டும்.
எவ்வாறு வாழ்த்த வேண்டும்
அதாவது “இப்போது நான் கொடுக்கின்ற இந்த பணமானது அதை வாங்குகின்ற நபர்களின் அனைத்து விதமான தேவைகளை பூர்த்தி செய்த பிறகு, அந்த பணம் பல மடங்கு பெருகி மீண்டும் என்னிடம் வரவாக திரும்ப வேண்டும்” என பிரபஞ்சத்திடம் சில நொடிகள் உங்கள் மனதிலேயே வழிபட்ட பிறகு பிறருக்கு பணத்தை கொடுக்க வேண்டும்.
நாணயமாகவோ அல்லது ருபாய் தாளாகவோ எப்படியிருந்தாலும் சரி, எக்காரணம் கொண்டும் பணத்தை தூக்கி எறிய கூடாது.
பிச்சை எடுக்கும் நபர்களுக்கு பணம் கொடுப்பதாக இருந்தாலும் கூட அதை மிகவும் மரியாதையாக, அந்த நபர்களின் கரங்களில் கொடுக்க வேண்டும்.
தங்களிடம் பணம் இல்லை என்றாலும் “பணம் இல்லை, பணம் காலி, பணம் தீர்ந்து விட்டது” போன்ற எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதில் தற்போது “பணம் சற்று குறைவாக உள்ளது, “கூடிய விரைவில் பணம் வந்து சேரும்” என்பன போன்ற நேர்மறையான வார்த்தைகளை கூறிப் பழக வேண்டும்.
எவ்வாறு இருக்க வேண்டும்
சொந்தத் தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களுக்கு எத்தகைய பிரச்சனைகள் இருந்த பொழுதிலும் தொழில் கூடங்களிலும், வியாபார தளங்களிலும் எப்பொழுதும் இன்முகத்தோடு இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.
செல்வத்தின் அம்சமான மகாலட்சுமி தேவி இன்முகம் கொண்ட நபர்களையே அதிகம் விரும்புவாள் என வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன.
முகத்தை கடுகடுவென வைத்திருப்பவர்களும், அடிக்கடி கோபப்படுபவர்களிடமும் லட்சுமி தேவியின் சகோதரியான மூதேவி தான் சென்று சேர்வாள் எனவும் அந்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
பணவரவு அதிகம் ஏற்பட
தங்கள் இல்லங்களில் பணவரவு அதிகம் ஏற்பட வேண்டும் என நினைக்கும் பெண்கள் வாரந்தோறும் வருகின்ற செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கட்டாயம் பஞ்சமுக குத்து விளக்குகுகளில் நெய் அல்லது இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
லட்சுமி தேவியின் அருட்கடாட்சம் அதிகம் நிரம்ப பெற்றவர்களுக்கு தான் வைரம், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களின் சேர்மானம் அதிகம் ஏற்படும்.
ஒருவருக்கு அவர் வாழும் காலத்தில் கிடைத்த தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களில் செய்யப்பட்ட நகைகள், பாத்திரங்கள் போன்றவைகளை எக்காரணம் கொண்டும் விற்கவோ, அடகு வைக்கவோ கூடாது.
மேலும் தங்களின் வாரிசுகளுக்கு அன்பளிப்பாகவும் அந்த பொருட்களை கொடுக்க கூடாது. தங்களின் காலம் முடிந்த பிறகு தான், அந்த பொருட்கள் தங்களின் வாரிசுகளுக்கு கிடைக்கும் படி செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.