யாழ் பிரபல ஆலயத்திற்கு பால் வழங்கிய பசுவிற்கு நேர்ந்த கொடூரம்; துடிக்கும் கன்று!
யாழில் தனது தாயினைத் தேடி பசியுடன் அலைந்து திரியும் கன்று தொடர்பில் காணொளி வெளியாகியுள்ளது. குறித்த கன்றின் தாய் மாடு களவாடுவோரால் இறைச்சிக்காக களவாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தாயை காணாது இளங்கன்று வீதிகளில் கத்தியபடி அலைந்துதிரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நித்திய பூசைக்கு பால் வழங்கிய பசுக்கள்
யாழ் பொன்னாலை மேற்கில் உள்ள எனது கோமாதா இல்லத்தில் உள்ள பசுவே இவ்வூரைச் சேர்ந்த திருடர்களால் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது.
அதோடு கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் வயிற்றில் சிசுவுடன் இருந்த பெறுமதியான பசுவும் இறைச்சிக்காக கடத்தப்பட்டு வெட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தொடர்ச்சியாக பொன்னாலைப் பகுதியில் உள்ள சில திருடர்களால் இவ்வாறு மாடுகள் களவாடப்படுவது தொடர்பில் கிராம மக்கள் மிகவும் கவலையடைகின்றனர்.
களவாடப்பட்டு கொல்லப்பட்ட பசுக்கள் பொன்னாலை வரதராஜப் பெருமாளுக்கு நித்திய பூசைக்கு பால் வழங்கி வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோமாதாக்களை தெய்வங்களாக வழிபடும் எம்மவர் மத்தியில் இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மனதினை கனக்கச் செய்கின்றன.
மேலும் மாடுகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் இரக்கமற்றவர்களின் கொடூர செயலால் தாயை இழந்த கன்றின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ள நிலையில் , இவ்வாறு பசுவதை செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.