இலங்கையில் இம்முறை வீழ்ச்சியை கண்ட வாக்களிப்பு வீதம்!
இலங்கையில் இன்றையதினம் (14-11-2024) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அண்ணளவாக 60 முதல் 65 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளனர்.
பாரிய அளவிலான எந்தவித முறைகேடும் பதிவாகவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெற்றன.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் 60 சதவீத வாக்குகளும், நுவரெலியாவில் 68 சதவீத வாக்குகளும், வன்னியில் 65 சதவீத வாக்குகளும், மொனராகலையில் 63 சதவீத வாக்குகளும், மாத்தறையில் 64 சதவீத வாக்குகளும், மாத்தளையில் 67 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
பதுளையில் 67 சதவீத வாக்குகளும், கேகாலையில் 64 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
கொழும்பில் 65 சதவீத வாக்குகளும், இரத்தினபுரியில் 63 சதவீத வாக்குகளும், குருநாகலில் 64 சதவீத வாக்குகளும், புத்தளத்தில் 56 சதவீத வாக்குகளும், பொலனறுவையில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அம்பாந்தோட்டையில் 60 சதவீத வாக்குகளும், அம்பாறையில் 62 சதவீத வாக்குகளும், காலியில் 64 சதவீத வாக்குகளும், அனுராதபுரத்தில் 65 சதவீத வாக்குகளும், மட்டக்களப்பில் 61 சதவீத வாக்குகளும், திருகோணமலையில் 67 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.