இந்த ஒரு செயலால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரை திட்டி தீர்த்த விஜே சித்ராவின் ரசிகர்கள்
தமிழில் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாடகம் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்ப வாழக்கையை அழகாக எடுத்து சொல்லும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த நிலையில் இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. இதற்கு நன்றி தெரிவித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் மூத்த அண்ணன் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்டாலின் அவர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் புகைப்படத்தைப் போடு நன்றி தெரிவித்திருந்தார்.
இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த மறைந்த சித்ரா அவர்களது புகைப்படம் மட்டும் இடம்பெறவில்லை.
தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா புகைப்படம் கூட இடம்பெற்றிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த விஜே சித்ராவின் ரசிகர்கள் தற்போது ஸ்டாலின் அவர்களை கடுமையாக திட்டி தீர்த்துள்ளனர்.