யாழில் வன்முறைக்கும்பல் அட்டகாசம்; வாகனங்களிற்கும் தீ வைப்பு
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கில் வீடொன்றை அடித்து நொருக்கிய வன்முறைக் கும்பல், வீட்டிலிருந்த வாகனங்களிற்கும் தீ வைத்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
கொக்குவில் கிழக்கு நந்தாவில் அம்மன் கோவிலை அண்டிய பகுதியில் உள்ள ஐஸ் கிறீம் உற்பத்தி நிலையம் இயங்கும் வீட்டிற்குள் நேற்று இரவு முகுந்த வன்முறைக் கும்பலே இந்த அடாவடியில் ஈடுபட்டுள்ளது.
இதன்போது வாள்கள், கம்புகள், சகிதம் புகுந்த குழுவினர் முதலில் வீட்டை அடித்து நொருக்கியதோடு வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த காரையும் அடித்து நொருக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இரு மோட்டார் சைக்கிளையும் தீ வைத்துக் கொழுத்தியதில் இரு மோட்டார் சைக்கிள்களும்முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.






