தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு மனமார்ந்த வாழ்த்து; எடப்பாடி பழனிசாமி போட்ட பதிவு !
தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நடைபெற்று முடிந்த 17-வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்குமனமார்ந்த வாழ்த்து
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நீடிக்கும் நிலையில், பழனிசாமியின் இந்தப் பதிவு ஒரு ‘சிக்னல்’ ஆக கருதப்படுகிறது.
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.@AIADMKOfficial
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 9, 2026
தவெகவுக்கு பெரும்பான்மைக்கான 118 இடங்கள் கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரிடம் இருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை. திருமாவளவன் தனது முடிவை இன்று மாலை அறிவிக்க உள்ளார்.
அதன் பிறகு, தவெகவுக்கு பெரும்பான்மைக்கான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உறுதி செய்யப்பட்ட பிறகே, ஆளுநரிடம் இருந்து அழைப்பு வரும் என்று தெரிகிறது. இதனிடையே, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதற்கான காய்நகர்த்தல்களை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் பரவி வந்தன.
இப்பின்னணியில் புதிதாக அமையவுள்ள ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.