விஜய் மீதான வெறுப்பு; கடும் பின்விளைவுகளை எதிர்கொள்ளபோகும் பாஜக, அதிமுக ,திமுக!
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க முடியாமல் போனால் பாஜக, அதிமுக திமுகவிற்கு பாதகமாகும் என அரசியல் நிபுணர்கள் சுட்டிகாட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உளவியல் ரீதியாக பலரையும் விஜய் தன் பக்கம் ஏற்கனவே இழுத்துவிட்டார் என்றும், அவரை ஆளவிட்டு, அவரது தவறுகளை சுட்டிக்காட்டுவதை விட்டுவிட்டு, அவரை பதவியேற்கவிடாமல் செய்வது பாஜக, அதிமுக, திமுகவிற்கு பாதகமாகும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

பதவியேற்கவிடாமல் செய்வது பாஜக, அதிமுக, திமுக...
அத்துடன் விஜய் அமைதியாக இருப்பதும் மக்களிடையே அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறதாகவும் அவர்கள் சுட்டிகாட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. தமிழக சட்டமன்றத் தேர்தல் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 தொகுதிகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இதில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தார் . இதில் ஒரு இடத்தில் ராஜினாமா செய்தாக வேண்டும். எனவே 107 இடங்கள் தவெகவிற்கு உள்ளது.
ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் இல்லை. இதனிடையே தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் திடீரென்று விலகி த.வெ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததுடன், ஆட்சிக்கு ஆதரவும் கொடுத்தது.
காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால், த.வெ.க.வின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது. 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தது. நேற்று இடதுசாரிகள் தவெகவிற்கு ஆதரவு கடிதம் தந்துவிட்டார்கள்.
இதனால் விஜய் தற்போது 116 இடங்களுடன் இருக்கிறார். 117 என்கிற மேஜிக் இல்லாத காரணத்தால் ஆட்சியமைக்க முடியாத நிலையில் விஜய் இருக்கிறார். இந்நிலையில் தமிழக அரசியல் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் விசிக தவெக உடன் இணைந்து ஆட்சியமைக்க வாய்ப்பு அதிகம் என்கிற நிலை உள்ளது. ஒருவேளை அது நடக்காமல் போனால் அது விஜய் வருவார் என்று வாக்களித்த மக்களை உளவியல் ரீதியாக பாதிக்கும் வாய்ப்பு அதிகம். ஏற்கனவே மூன்று முறை ஆளுநரை சந்தித்து மெஜாரிட்டி இல்லை என்று ஆளுநர் திருப்பி அனுப்பியது மக்கள் மத்தியில் விஜய்க்கு ஆதரவு அலையை உருவாகி வருகிறது.
ஏனெனில் திமுக, அதிமுக சேர்ந்து தவெகவை ஆட்சியமைக்க விடமால் சதி செய்வதாக சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியாகியுள்ளமை குர்இப்பிடத்தக்கது.