விஜய் பட பிரபல கராத்தே மாஸ்டர் காலமானார் ; துயரத்தில் தமிழ் திரையுலகம்
தமிழ் சினிமா நடிகரும் பிரபல கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி உயிரிழந்துள்ளமை சினிமா வட்டாரத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி , நடிகர் விஜய் இன் பத்ரி படம் , காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் .
மருத்துவமனையில் சிகிச்சை
இவர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று(24) நள்ளிரவு 1.45 மணியளவில் ஷிகான் ஹுசைனி உயிரிழந்துள்ளார்.
இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. முன்னதாக ஷிகான் ஹுசைனி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கலை வருகின்றனர்.