விடை கொடு எங்கள் நாடே ; முடிவுக்கு வருமா ஈழத் தமிழ் அகதி வாழ்வு?
தொலைக்காட்சி ரசிகர்களின் மனங்களில் இடிபிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவி சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி.
இந்த நிகழ்வில் அகதி முகாமில் இருக்கும் ஈழத் தமிழ் அகதியான டிசாதனா “விடை கொடு எங்கள் நாடே” பாடி மேலையில் இருந்த நடுவர்கள், சக போட்டியாளர்கள், மற்று நிகழ்வை களித்து மகிழ்ந்திருந்த அனைவரையும் கண் கலங்க வைத்துவிட்டார்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு....
“விடை கொடு எங்கள் நாடே” இந்த பாடலை ஈழத் தமிழர் பாடும்போதெல்லாம் அது அதிக வலியை உணர வைக்கிறது. வழக்கமாக புலம்பெயர் நாடுகளில் இருந்து பங்குபற்றும் ஈழத் தமிழர்களே இப் பாடலை பாடுவர்.
ஆனால் முதன் முதலாக தமிழக அகதி முகாமில் இருக்கும் ஒரு ஈழத் தமிழ் யுவதி டிசாதனா பாடியுள்ளார். தம்மை கவனிக்கும் கியூ பிராஞ் இருக்கிறது. அகதிகளை அடைத்து வைக்கும் சிறப்புமுகாம் இருக்கிறது.
இந்த அச்சங்களை மீறி பாடியிருக்கிறார். அதுமட்டுமல்லாது இறுதியாக தன் முகாமில் இருக்கும் சக ஈழத் தமிழ் அகதிகளையும் மேடையேற்றி அவர்களுக்காகவும் சில வரிகள் பாடினார் டிசாதனா .
இந்த பாடலின் மூலம் தமிழ் நாட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக ஈழத் தமிழர் அகதிகளாகவே இருக்கின்றனர் என்பதை உலகிற்கு காட்டியுள்ளார் டிசாதனா.
இந்நிலையில் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இன்னும் எத்தனை காலத்திற்கு ஈழத் தமிழ் அகதிகளை இப் பாடலை பாட வைத்து கேட்டுக் கொண்டு இருக்கப் போகிறது?
இந்த அவல அகதி வாழ்விற்கு எப்பதான் முடிவு கட்டப் போகிறது? என ஈழந்தமிழர் ஒருவர் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.