விறுவிறுப்பாகும் பிக்பாஸ் சீசன் 5; பிரியங்காவை நாமினேட் செய்த ராஜு!
தனியார் தொலைக்காட்ட்சியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 இரண்டாவது வாரம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றது.
5 ஆவது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்போது 16 போட்டியாளர் உள்ளனர்.
#Day15 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/FAqY8jjNZz
— Vijay Television (@vijaytelevision) October 18, 2021
தொடர்ந்து தற்போதைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைப்பெறுகிற நிலையில் , பாவனி, இசை, சின்னப்பொண்ணு உள்ளிட்டோரை நாமினேட் செய்கின்றனர்.
அதில் கடைசியாக கன்பெஷன் ரூமுக்குள் இருக்கும் ராஜு, சின்னப்பொண்ணுவை நாமினேட் செய்து விட்டு, கதவை திறந்து பிரியங்காவின் முழு பெயரை கேட்க வெளியில் இருந்த போட்டியாளர்கள் சிரிக்கிறார்கள்.