மலையகத்தின் மூத்த எழுத்தாளர் மு. சிவலிங்கம் காலமானார்
மலையகத்தின் மூத்த எழுத்தாளர், இலக்கிய ஆளுமை, கலைஞர், தொழிற்சங்கவாதி மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் மு. சிவலிங்கம் காலமானார்.
நீண்டகாலமாக மலையக இலக்கியம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக பங்காற்றிய சிரேஷ்ட படைப்பாளியாக விளங்கிய இவர், 60களில் தன்னை ஒரு சிறந்த எழுத்தாளராக உலகுக்கு பறைசாற்றிக்கொண்டார்.

இலக்கியப் படைப்புகள்
மலையக மக்களின் வாழ்வியல் போராட்டங்கள், கலாசாரம், மண்வாசனை, சமூக மாற்றங்கள், விழுமியங்களை மையமாகக் கொண்டு பல தசாப்தங்களாகத் தொடர்ந்து எழுதி வந்த எழுத்தாளராக இவர் விளங்கினார்.
சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் மற்றும் திறனாய்வுகள் எனப் பல்வேறு இலக்கியப் படைப்புகளை வெளியிட்ட மு.சிவலிங்கம், ‘ஒப்பாரி கோச்சி’ என்ற இலக்கிய வெளியீட்டின் ஊடாக தனி அடையாளம் பெற்றவர்.
அன்னாரது மறைவு மலையகத்துக்கு மட்டுமன்றி, முழு நாட்டுக்கும் நாட்டின் இலக்கியத்துறைக்கும் பேரிழப்பாகும்.