அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன் ; இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பொற்காலமாக இருக்கும்..
வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் அக்டோபர் மாத தொடக்கத்தில் வக்ரமாகவுள்ளார். அதுவும் அக்டோபர் 03 ஆம் திகதி முதல் சுக்கிரன் வக்ரமடையவுள்ளார்.
இந்நிலையில் சுமார் 42 நாட்கள் வரை இருக்கப் போகிறார். அதன் பின் நவம்பர் 14 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிப்பார். சுக்கிரனின் இந்த வக்ர பயணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பொற்காலமாக இருக்கப் போகிறது.

எந்த ராசிக்காரர்கள்
கடகம்: வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் குறையும். நீண்ட காலமாக சிரமப்பட்டு வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நீண்ட காலமாக நடந்து வந்த நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் நிதி நன்மைகளைப் பெறக்கூடும். வீட்டுச் சூழல் மேம்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தம் குறைவதால் நீங்கள் மிகவும் நிம்மதியாக உணரக்கூடும்.
யாழில் சீர்திருத்தப் பள்ளியில் அரங்கேற்றிய கொடூரம் ; சிறுவர்களுக்கு அதிரடி காட்டிய பொலிஸார் ; சமூக வலைதளத்தில் பரவும் காணொளி
மிதுனம்: திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கலாம். சிலர் கடந்தகால முதலீடுகளிலிருந்து பயனடைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலைமை வலுவடைவதோடு, கடன் தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில், உங்கள் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தினால் வாழ்வில் நல்ல உச்சத்தை தொடுவீர்கள்.
மகரம்: பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். ஊடகம், ஃபேஷன், கலை துறையில் இருப்பவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற செலவுகளையும் கட்டுப்படுத்துவது முக்கியம்.