சபையில் துணிச்சலாக பேசிய எம்.பி வேலுகுமார்! பாராட்டிய மனோ கணேசன்
"கருத்து சுதந்திரம்" என்ற அடிப்படையில், சிங்கள எம்பீக்கள் நாடாளுமன்றத்தில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் எவ்வளவு வேண்டுமானாலும் புண்படுத்தலாம். ஆனால் ஒரு தமிழ் எம்பி, தான் நம்பும் தனது கருத்தை சபையில் கூற முடியாதா..? என சிங்களத்தில் அரசு தரப்பை பார்த்து எம்பி வேலுகுமார் கேட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில், "புலிகளின் தலைவர் பிரபாகரன் மேதகு தேசிய தலைவர்" என்ற தமிழ் பதத்தை, தனது தமிழ் உரையில் பயன்படுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் எம்பி கஜேந்திரனை விடவும்,
அதை மறுத்து "புலிகளின் தலைவர் ஒரு பயங்கரவாதி, கொலைக்காரன், அட்டூழியக்காரன் ஆகவே கஜேந்திரன் எம்பியின் (Selvarajah Kajendren) உரையை ஹன்சார்ட்டில் (பதிவேடு) இருந்து அகற்றுங்கள்" எனக் கூச்சல் எழுப்பி சண்டையிடும் சிங்கள ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பல, விமல் வீரவன்ச கட்சியின் "முஸ்லிம் பெயர் தாங்கிய" மொஹமட் முசாம்பில் எம்பி மற்றும் ஏனைய அரசு தரப்பு சிங்கள எம்பீக்களை விடவும்,
எம்.பி கஜேந்திரன் அவர் கருத்தை கூறுகிறார். அவருக்கு பேச்சு சுதந்திரம் உள்ளது. அதை நான் எப்படி தடை செய்ய முடியும்? நீங்கள் இதுபற்றி புகார் செய்கிறீர்கள் என்றால், நான் அதை சபாநாயகரிடம் கூறுகிறேன். ஆனால் கஜேந்திரன் எம்பி யின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து அகற்ற நான் இப்போது உத்தரவிட மாட்டேன்." என சுத்தமான சிங்களத்தில் மீண்டும், மீண்டும், உரக்க, உரக்க கண்டி எம்பி-ஜனநாயக மக்கள் முன்னணி பிரதிதலைவர் வேலு குமார் கூறுயுள்ளார்.
கண்டி எம்பி-ஜனநாயக மக்கள் முன்னணி பிரதிதலைவர் வேலு குமார்தான் இங்கே "அதிக துணிச்சல்கார பாராட்டுக்குரியவர்" என முகநூலில் நாடளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது உத்தியோகபூர்வ பக்கத்தில் குறித்த கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.