வவுனியாவில் 3 வேட்பாளர்களின் வாகனங்களை தடுத்து வைத்த பொலிஸார்! மூவர் கைது
வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட 3 வேட்பாளரின் 2 வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வேட்பாளரின் உருவப்படம் மற்றும் ஸ்டிக்கர் பொறித்த வாகனங்களில் வேட்பாளர்கள் பயணிக்க முடியும்.
தேர்தல் வேட்பாளர் இன்றி அவருடைய உருவப்படம் அல்லது ஸ்டிக்கர் பொறித்த வாகனங்கள் பயணிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.
குறித்த விதிமுறையை மீறி வவுனியாவில் வேட்பாளர் இன்றி வேட்பாளரின் ஸ்டிக்கர்களுடன் நடமாடிய 3 வாகனங்களே வவுனியாப் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், 3 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ப.சத்தியலிங்கம், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரது படம் பொறித்த வாகனங்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், குறித்த வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யபட்ட சாரதிகள் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.