வெள்ளைவான் புரளியால் கிளிநொச்சியில் அடித்து நொருக்கப்பட்ட வாகனம்
கிளிநொச்சியில், வெள்ளைவான் புரளியால் வாகனம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாரதிபுரம் வை எம் சி ஏ வீதியில் பொருட்கள் விற்பனை செய்வதற்காக சென்ற வாகனமே பொதுமக்களால் நேற்று (16) மாலை மடக்கி பிடிக்கப்பட்டது.
பிரதேச மக்களுக்கு சந்தேகம்
வாகனத்தில் பயணித்த மூவரையும் கிராம அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளனர்.
குறித்த மூவரும் தமிழ் மொழியில் பேசாமையால் பிரதேச மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து கிராம அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை அழைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், அம்மூவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அப்போது, தாம் வியாபார நோக்கத்திற்காக அங்கு சென்ற நிலையில் பிரதேசவாசிகள் இவ்வாறு மடக்கிப்பிடித்ததாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.