யாழ்ப்பாணம் பயணித்த வாகனம் வவுனியாவில் கோர விபத்து; இருவர் பலி !
தம்புள்ளையில் இருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்கு மரக்கறி ஏற்றி சென்ற கப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வவுனியா, கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தானது ஏ-9 வீதி கனகராயன்குளம் பகுதியில் இன்று (30) அதிகாலை இடம்பெற்றதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வவுனியா, கனகராயன்குளம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
