இம்மாத இறுதி வரை மரக்கறி விலை உயர்வு
இம்மாத இறுதி வரை மரக்கறி விலை உயர்வாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்தோடு மரக்கறிகள் விலையேற்றம் காரணமாக நுகர்வோர் மாற்று வழிகளில் ஈடுபடுவதுடன் கடந்த காலங்களில் மரவள்ளிக்கிழங்கு மற்றும் பலாகாய்களுக்கு அதிக கேள்வி காணப்பட்டுள்ளது.
மரக்கறி விலை
ஒரு கிலோகிராம் மரவள்ளி மற்றும் பலாக்காய்களின் விலை இன்று 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு போஞ்சி, கேரட், வெண்டைக்காய், பீட்ருட், நோகோல், கறிமிளகாய், பாகற்காய் போன்ற காய்கறிகளின் மொத்த விலை 250 ரூபாயிலிருந்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பகுதிகளில் ஒரு கிலோ காய்கறிகளின் விலை 250 ரூபாவுக்கு விற்கப்படுவதாக சந்தை ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.