உங்கள் வீட்டில் துளசி செடி இருக்கா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்
ஒவ்வொரு வீட்டிலும் வீட்டின் நன்மைக்காக சில செடிகளை வளர்த்து வருவதையும் பழக்கமாக வைத்திருக்கிறோம். அவ்வாறு நாம் வளர்த்துவரும் செடிகளில் மிக முக்கியமானது துளசி செடி. அந்த துளசி செடியினை எவ்வாறு முறையாக பராமரிக்க வேண்டும். என்ன செய்யனும் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.
செடிகள் வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் இந்த துளசிச் செடியும் நிச்சயம் வளர்க்கப்படுகிறது. அவ்வாறு செடிகள் எதுவுமே வளர்க்காமல் இருந்தாலும் கூட துளசி செடியை மட்டுமாவது வீட்டில் வைத்து பூஜித்து வருவது நல்லது.
மேலும் இந்த புரட்டாசி மாதத்திற்கு உகந்த மாலையும் துளசி மாலைதான். இவ்வாறு மகாவிஷ்ணுவிற்கு விருப்பமான இந்த துளசிச் செடிகயை நாம் வீட்டில் வைத்து வணங்குவதன் மூலம் மகாலட்சுமி தேவி தானாகவே நமது வீடு தேடி வருவாள் என்பது ஐதீகம்.
எந்த வீட்டில் மகாலட்சுமி குடி கொண்டிருக்கிராறோ அங்கு எப்பொழுதும் துன்பத்திற்கு இடம் இருக்காது. எல்லாவகையான செல்வச்செழிப்புகளும் நிறைந்து காணப்படும். கடன் சுமை இருக்காது.
இவ்வாரான வரங்களை அள்ளித் தரும் துளசி செடிகளை வீட்டில் முறையாக வைத்து வளர்த்திட வேண்டும். அதனை துளசி மாடத்தில் வைத்தோ அல்லது மண் தொட்டியில் வைத்தோ வளர்த்து வரலாம். துளசியில் பலவகைகள் இருக்கின்றன.
கருந்துளசி இது காட்டுப்பகுதிகளில் தானாகவே வளர்ந்து வரும் செடியாகும். மற்றொன்று சற்று வெளிர் நிறத்தில் இருக்கும் சாதாரண துளசியாகும். இதனை தான் நாம் வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும்.
இந்தத் துளசிக்கு காலை சூரிய உதயத்திற்கு முன்னர் சுத்தமான நீரை ஊற்ற வேண்டும் வெள்ளிக்கிழமை தோறும் பால் அபிஷேகம் செய்து நெய் தீபம் அல்லது நல்லெண்ணை தீபம் ஏற்றி துளசிச் செடியை மூன்று முறை பிரதட்சணம் செய்து வணங்கிட வேண்டும்.
இவ்வாறு நாம் பூஜிக்கும் துளசி இலைகளை எந்தவித காரணத்திற்காகவும் பறித்து விடக்கூடாது. இவ்வாறு செய்வதால் நமக்கு பெரும் துன்பம் தான் ஏற்படும். இதனை பறித்து தான் இறைவனுக்கு படைக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. துளசியை இருக்கும் இடத்தில் வைத்தே பூஜித்தால் மட்டும் போதுமானதாகும்.
இதுவே நமக்கான பலன்கள் அனைத்தையும் சிறப்பாக கொடுத்திடும். அதுபோல் வீட்டிற்கு வரும் வெளியாட்கள் எவரும் துளசிச்செடியை தொட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மற்றவர்கள் துளசிச் செடியை தொடும் பொழுது அவர்களிடம் இருந்து வரும் எதிர்மறை சக்திகளினால் நமக்கு தீராத துன்பங்கள் சேர்ந்து விடும்.