வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு; சிறையிலேயே அழுக வேண்டும் ;சின்மயி ஆவேசம்!
தமிழகத்தில் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் போக்சோ வழக்கில் கைதாகியுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் ஆர். வீரமணி விவகாரத்தில், அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் சாந்தி என்பவருக்கு வீரமணியை போலவே கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பிரபல பின்னணி பாடகி சின்மயி சமூக வலைதளத்தில் ஆவேசமாக குரல் கொடுத்துள்ளார்.
பாடகி சின்மயி சமூக வலைதளத்தில் , பிஞ்சுச் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களிடம் தாரைவார்ப்பது மன்னிக்க முடியாத குற்றம்.

ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையிலேயே அழுக வேண்டும்
அத்தகைய கொடூரச் செயலில் ஈடுபடும் பெண்களுக்கு தொடர்ச்சியான ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு அவர்கள் சிறையிலேயே அழுக வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் கடுமையாகச் சாடியுள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நேரடி குற்றவாளிகளை போலவே, அவர்களுக்கு துணையாக இருப்பவர்களும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் தற்போது வலுத்து வருகிறது.
போக்சோ வழக்குகளில் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்கக் கூடாது என்றும், இத்தகைய குற்றவாளிகளை சட்டம் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.