வெடுக்குநாறிமலை விவகாரம் ; பொலிசார் அட்டகாசம்!(Video)
வவுனியா வெடுக்குநாறி ஆதிசிவன் கோவிலுக்கு செல்லுகின்ற மக்களின் பெயர் விபரங்கள் பொலிசாரினால் பதிவு செய்யப்படுவதாகவும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய பொலிசார் எதற்காக இவ்வாறு பெயர் விபரங்களை திரட்டுவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இனந்தெரியாத நபர்களினால் அழிக்கப்பட்ட விக்கிரங்கள் நேற்று வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த நிலையில் ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.
நீதிமன்றம் வழங்கிய உத்தவை கூட பொருட்படுத்தாமல் பொலிசாரும் அதிகாரிகளும் இடையூறு விளைவித்திரந்தாகவும் குறிப்பாக அவர்களது பாதணிகளைகூட களற்றாது ஆலய சூழலிற்குள் நடமாடியதாக து.ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வெடுக்குநாறி ஆதிசிவன் கொவிலுக்கு வருகைதருகின்ற மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் பொலிசார் இவ்வாறு மக்களின் பெயர் விபரங்களை திரட்டுவதாக து.ரவிகரன் குறிப்பிடுகின்றார்.
அத்துடன் பொலிசார் அங்கு தங்கியிருப்பதற்காக கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டுள்தாகவும் பாதணிகளுடன் அட்டகாசம் செய்வதாக து.ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் எல்லாமே பொலிசாரின் கேவவமான நடவடிக்கைகள் என்றும் து.ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.