வவுனியாவில் குளத்திலிருந்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்! ஐவர் கைது
வவுனியா உள்ள குளப்பகுதி ஒன்றிலிருந்து காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
வவுனியா - பூவரசங்குளம் மணியர்குளம் குளப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு நேற்றிரவு (09-03-2023) தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த இளைஞரின் சடலத்தில் காயங்கள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் இது மதுபோதையில் நிகழ்ந்த கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 5 நபர்களை கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் யசோதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.