வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் இடம்பெறும் அதிர்ச்சி சம்பவங்கள்!
வவுனியாவில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் பெரும் மோசடி சம்பவங்கள் இடம்பெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், குறித்த அலுவலகத்தில் கடவுசீட்டை பெற காத்திருந்த மக்கள் இது தொடர்பில் இன்றைய தினம் (21-07-2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
குறித்த அலுவலகத்திற்கு முன்பாக கடந்த 3 நாட்களாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் பலர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இங்கு வெளியில் உள்ள மாபியாக்களால் மோசடிகள் இடம்பெறுவதாகவும் அதற்கு குறித்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், வவுனியாவில் இருக்ககூடிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்திற்கு வெளியில் இருந்து சிலரால் பெயர்கள் பதியப்பட்டு கடவுசீட்டை பெறுவதற்கான விபரங்கள் திரடப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து அலுவலக கட்டுப்பாட்டாளருக்கு தெரிவித்த போது அவர் குறித்த விடயம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என கூறி அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.