வவுனியாவில் பழைய மின் பட்டியலில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!
வவுனியாவில் கடதாசியில் மின் பட்டியல் விநியோகிக்கப்படுவதாகவும், இதனால் பழைய மின் பட்டியலில் மாற்றங்கள் செய்து இம்மாத மின்பட்டியால் விநியோகம் செய்வதாகவும் பாவனையாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாட்டில் கடதாசி தட்டுப்பாடு காரணமாக மின்பட்டியலை அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் திருமதி மைதிலி தயாபரன் தெரிவித்தது,
“வட மாகாணத்தினால் வழங்கப்படும் மின்பட்டியல்கள் தமக்கு கிடைக்கவில்லையெனவும், இரண்டு வாரங்களுக்கு பின்னரே அவை விநியோகிக்கப்படுமெனவும் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக எமக்கு தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு பாவனையாளர்களுக்கு மின் பட்டியலை வழங்காதவிடத்து அது அவர்களுக்கு மேலும் சிக்கல்களை உருவாக்கும் என்ற காரணத்தினால் தம்மிடமிருக்கம் அடிக்கட்டைகளில் இம்மாத மின் பட்டியலை வழங்குவதாக தெரிவித்தார்.
வவுனியாவில் மட்டுமன்றி, வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும், இலங்கையின் பல பாகங்களிலும் இதே நிலை காணப்படுகிறது எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, மக்கள் மின்பட்டியல் கட்டுவதிலும் சிக்கல் நிலையினை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு கட்டணங்களுக்கு இன்று முதல் பட்டியல் வழங்கப்படமாட்டாது எனவும் டிஜிட்டல் முறையிலேயே கட்டணங்கள் அறிவிக்கப்படுமென குறித்த சபை அறிவித்துள்ளது.
மக்களின் சிக்கல் நிலையினை உணர்ந்து அதற்கு ஏற்றால் போல் செயற்படும் அதிகாரிகளும், நிறுவனங்களும் பாராட்டப்பட வேண்டும்.