வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுவன்! அதிர்ச்சி சம்பவம்
வவுனியாவில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 10 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்றைய தினம் (18-04-2022) காலையில் வவுனியா கல்நாட்டினகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கல்நாட்டினகுளம் பகுதியை சேர்ந்த சாந்தன் வயது 10 என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
நேற்றையதினம் (17-04-2022) மாலை தனது வீட்டிலிருந்து வெளியில் சென்ற குறித்த சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமையினால் அவனது உறவினர்கள் தேடியுள்ளனர்.
இதன்போது குறித்த சிறுவன் வீட்டிற்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தகவலறித்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுவனின் சடலத்தை மீட்ட மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.