வவுனியாவில் ஊரடங்கு வேளையில் இடம்பெற்ற சம்பவம்!
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மதுபானசாலையில் ஊரடங்கு வேளையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (03-04-2022) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மதுபானசாலை மூடியதன் பின்னர் மதுபானசாலைக்கு முன்னால் மூவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது ஒருவர் தனது மோட்டார் சைக்கிலில் வைத்திருந்த மரம் அறுக்கும் வாள் மூலம் மற்றைய இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அவ்விடத்திற்கு செல்ல முற்பட்டபோது, மற்றைய இருவரும் இணைந்து அவரின் வாளை பறித்து, அவர் மீது வாள் மற்றும் கற்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த நபர் அங்கிருந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று தஞ்சமடைந்த நிலையில், இருவரும் அவ்விடத்திற்கு வாள்களுடன் வெளியேறி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.