வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வு!
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் கடல் தீர்த்தம் எடுத்து விளக்கு எரிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு நடத்துவதற்கு முன்பாக கடல் தீர்த்தம் எடுத்து விளக்கு எரிக்கும் நிகழ்வு ஒவ்வொரு முறையும் நடத்தப்படுகின்றமை வழமையாகும்.
அதற்கமைய இம்முறையும், கடல் தீர்த்தம் (உவர் நீர்) எடுத்து வரப்பட்டு, முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு பானையில் இடப்பட்டு, அதன்பின்னர் உப்பு நீர் விளக்கு, நேற்று திங்கட்கிழமை ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மறுநாள் திங்கள் கிழமை அதிகாலை, இந்த உவர் நீர் விளக்கானது மடைப் பண்டங்களுடன் காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும்.
அதன்பின்னரே வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.