வீதியில் இருந்து விலகி ஆற்றில் பாய்ந்த வேன் ; மயிரிழையில் உயிர்தப்பிய யுவதிகள்!
திருகோணமலை கந்தளாய் - சேருநுவர பிரதான வீதியில், அணைக்கட்டுக்கு முன்னால், ஆடைத் தொழிற்சாலை யுவதிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்று வீதியில் இருந்து விலகி ஆற்றில் பாய்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
இன்று காலை 8.00 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

கந்தளாயில் இருந்து ஆடைத் தொழிற்சாலை யுவதிகளை வான் எல பகுதிக்கு ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, கந்தளாய் அணைக்கட்டுக்கு முன்னால் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்திலிருந்த இரண்டு மின்சாரக் கம்பங்களை பலமாக மோதி உடைத்துக்கொண்டு அருகில் இருந்த ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக கந்தளாய் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
வேனில் பயணித்த சாரதி உட்பட இரண்டு யுவதிகளும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என கந்தளாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.