மரத்தில் மோதிய வான்...ஒருவர் உயிரிழப்பு
புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
வென்னப்புவ, லுணுவில, ரோஸ் மரியவத்தையைச் சேர்ந்த 74 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், உயிரிழந்தவரின் 9 வயது பேரனும், மருமகனும் காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேனில் பயணித்த மூவரும் அனுராதபுரம் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களான தமது மகள் மற்றும் மனைவியைப் பார்க்கச் சென்றுவிட்டு வீடு நோக்கிப் பயணம் செய்துள்ளனர்.
அந்த சமயத்தில் அனுராதபுரத்தில் இருந்து வென்னப்புவ, லுணுவில நோக்கி பயணித்த வான் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் இந்த விபத்தானது இடம்பெற்றுள்ளது. .
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.