கொழும்பில்சுற்றிய மர்ம வேனை மடக்கிப்பிடித்த பொலிஸார்!
கொழும்பில் குழப்பதை ஏற்படுத்திய மர்ம வேன் ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடவத்தை பிரதேசத்தில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பேலியகொடையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் ஆஜர்
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கட்டுபொத மற்றும் மாவத்தகம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.