இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்லின் மதிப்பு இவ்வளவுதானா
நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக் கற்களின் உண்மையான மதிப்பு பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
200 மில்லியன் அமெரிக்க டொலர் என ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட அந்த இரத்தினக் கல்லின் பெறுமதி 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 36 இலட்சம் ரூபா) எனத் தெரியவந்துள்ளது.
கின்னஸ் சாதனை
நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய இரத்தினக் கொத்து என கின்னஸ் சாதனை படைத்துள்ளதாகவும், ஆனால் இது ஒரு தொல்பொருள் மதிப்பை மட்டுமே கொண்டுள்ளது என்றும் குழுவுக்கு வந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் இரத்தினக் கற்களுக்கு கிடைத்த விளம்பரத்தின்படி, உரிமையாளர் பத்து மில்லியன் டொலர்களை எதிர்பார்த்ததாகவும் கூறப்படுகின்றது.
மேலும் விசாரணை நோக்கங்களுக்காக இரத்தினக் கொத்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்