வரலாறு காணாத உச்சம்; சிவப்பு ரோஜா ஒன்றின் விலை 750 ரூபாய்!
காதலர் தினத்தை முன்னிட்டு நுவரெலியாவில் ரோஜாப்பூ விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சிகப்பு ரோஜா 750 ரூபாவிற்கும் மஞ்சள் ரோஜா 600 ரூபாவிற்கும் வெள்ளை ரோஜா 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
உலகம் எங்கும் காதலர் தினம் இன்று (14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள், சாக்லேட் உள்ளிட்ட வித விதமான பரிசு பொருட்களை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம்.

காதலுக்கும் ரோஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு
காதலுக்கும் ரோஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு மேலும் காதலின் அடையாளமாகவே ரோஜாப்பூ மாறிவிட்டதால் காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கடைகளில் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருக்கும் .
ஆனால் இம்முறை நுவரெலியாவில் வியாபாரம் சற்று மந்தமாக உள்ளதாக தெரிவிக்கின்றன. இதில் சிகப்பு ரோஜா 750 ரூபாவிற்கும் மஞ்சள் ரோஜா 600 ரூபாவிற்கும் வெள்ளை ரோஜா 400 ரூபாவிற்கும் விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அனர்த்தங்களால் பூக்கள் அழிவடைந்தது இதனால் பூக்களின் வரத்தும் குறைவால் கடந்த ஆண்டை காட்டிலும் கடுமையாக குறைந்துள்ளது. இதன் காரணமாக பூக்கள் மற்றும் பூங்கொத்துக்களின் விலை அதிகரித்து உள்ளது.
நுவரெலியாவில் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்காலப் பருவநிலை மாற்றம் காரணமாக ரோஜா உற்பத்தி சுமார் 35% முதல் 45% வரை சரிந்துள்ளது. மலையகத்தில் இருந்து புகையிரம் இயங்காது உள்ளமையால் பூக்களை ஏற்றுமதி செய்துகொள்ள முடியாத நிலையும் உள்ளது.
இந்த ஆண்டு உற்பத்தி குறைவு மற்றும் அதிகத் தேவை காரணமாகவே ரோஜா பூக்களின் விலை வரலாறு காணாத நிலையை எட்டியுள்ளது.
அதுமட்டுமல்லாது கூடுதலாக தற்போது செயற்கை மலர்களைப் பரிசளிக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் இதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது எனவும் வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.