14 வயதில் சதம் ; யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
இன்று நடைபெற்ற IPL போட்டியில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் சதம் (101) அடித்து அசத்தியுள்ளார்.
பீகாரில் பிறந்த இந்த இளம் வீரரான இவர் தனது 14 வயதிலேயே இந்த சாதனையை தனதாக்கியுள்ளார்.
சூரியவன்ஷியின் கிரிக்கெட் பயணம் நான்கு வயதில், தனது தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கியது.
சூர்யவன்சி 12 வயது சிறுவராக இருக்கும் போதே பீகாரின் 19 வயதுக்குட்பட்ட அணிக்காக வினூ மன்கட் கோப்பையில் விளையாடினார்.
2024 இல், 12 வயதில் மும்பைக்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்காக தனது முதல் தரப் போட்டியில் அறிமுகமானார்.
இதன் மூலம், பீகார் அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய இரண்டாவது இளம் வயது வீரர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக நான்காவது இளைய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதன் போது முன்னாள் கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங்கின் (15 ஆண்டுகள் 57 நாட்கள்) சாதனையை முறியடித்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற IPL போட்டியில் 210 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய ராஜஸ்தான் அணியின் ஓப்பனிங் வீரர்கள் ஜெய்ஸ்வாலும், வைபவ் சூர்யவன்ஷியும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதன்படி, வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் சதம் (101) அடித்து அசத்தியுள்ளார்.
குறித்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சூர்யவன்ஷின் சதத்துடன் குஜராத்தை வீழ்த்திய ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.