கொரோனா தொற்றை விட தடுப்பூசியே அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தும் - சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே
கொரோனா தொற்றைவிட அதற்காக செலுத்தப்படும் தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளே அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கத்திய நாடுகளில் 12 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்க விஞ்ஞான ரீதியாக எந்த ஒரு தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும் தடுப்பூசியால் அதிகளவில் பாதிப்பு ஏற்படும் என மேற்கத்திய நாடுகளின் கருத்தாக உள்ளது. இதன் காரணமாக இன்னமும் சரியான தீர்மானத்திற்கு அவர்கள் வரவில்லை என்றும் தெரிவித்தார்.
இருப்பினும் அனைத்து சுகாதார பரிந்துரைகளையும் சரிபார்த்து சிறுவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தீர்மானகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.