திருட்டுவழியில் சிறுவர்களுக்கு தடுப்பூசி; விசாரணை தீவிரம்!
சிலாபம் கொக்காவில தடுப்பூசி மையத்தில் 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பைசர் பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை வைத்தியர் தினுஷா பெர்னாண்டோ தெரிவித்தார் குறித்த மையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் தங்களின் நெருங்கிய நண்பர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் தடுப்பூசியை வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட ஏராளமான மக்கள் நேற்று தடுப்பூசி மையத்தில் ஃபைசர் தடுப்பூசியைப் பெற முடியாமல் போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு அப்பகுதியைச் சேர்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் சிலாபம் கொக்காவில தடுப்பூசி மையத்தில் நேற்று ஒரு வைத்தியரின் குழந்தைகளுக்கும் பைசர் தடுப்பூசி போடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குடும்ப சுகாதார சேவைகள் பிரிவின் பெண் ஊழியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் குழு இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்தே இந்த நடவைக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.