பிரித்தானியா அரண்மனையில் ஒங்கி ஒலிக்கவுள்ள யாழ் வாகீசன் குரல்!
ஈழத்தின் பிரபல ராப் இளம் பாடகர் யாழ்ப்பாணம் இணுவையூர் வாகீசன் பிரித்தானியா அரண்மனையில் தைப்பொங்கல் விழாவில் பாடவுள்ளார்.
2026 ஆம் ஆண்டு பிரித்தானியா எலிசபெத் மகாராணியின் அரண்மனையில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில் பாடுவதற்கு யாழ்ப்பாணம் இணுவையூர் வாகீசனுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்காக வாகீசன் தற்போது லண்டன் சென்றுள்ளார்.

தென்னிந்திய தொலைக்காட்சிகளிலும் தனது ராப் பாடல்கள் மூலம் உலகளவில் பிரபல்யமடைந்த யாழ் மைந்தன் வாகீசன் , இன்று தனது குரல் வளத்தால் பிரித்தானியா எலிசபெத் மகாராணியின் அரண்மனையில் பாடும் சர்தப்பம் பெற்றுள்ளமை, யாழ்பாண தமிழர்களுக்கு மட்டுமல்லாது புலம் பெயர் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வாகீசன் பாடிய வண்ணமயில் ஏறும் என் தங்க வடிவேலோ கந்தன் உன்னை காண தினம் ஓடிவருவேனோ .... எனும் முருகன் பாடல் இளைஞயத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.