கழிப்பறைக்குள் மொபைல் பாவிப்பவரா நீங்க? காத்திருக்கும் ஆபத்து
மக்கள் எங்கு சென்றாலும் கைபேசி இல்லாமல் செல்வதில்லை என்கின்ற காலத்தில் இருக்கின்றோம். அந்தவகையில் கழிப்பறைக்கு செல்லும்போது மொபைல் கொண்டு செல்வர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அப்படியானவர்களுக்கு ஆய்வில் அதிர்ச்சிதகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கழிப்பறைக்குள் நீண்ட நேரம் அமர்ந்து கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதால் மூலநோய் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.
அதிக நேரம் கழிப்பறையில் அமர்ந்து இருக்கும் போது, குதப்பகுதியில் (rectal area) உள்ள இரத்த நாளங்கள் வீங்கி அழுத்தம் அதிகரிக்கிறது.
அதுமட்டுமல்லாது மலச்சிக்கல் மற்றும் பிற செரிமானப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இப்பழக்கத்தைத் தொடர்ந்தால் ஆசனவாய் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு இரத்த நாளங்கள் வீங்கி மூலநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.