பிளாஸ்டிக் கரண்டிகளின் பயன்பாடு 600 மில்லியனாக அதிகரிப்பு !
இலங்கையின் சுற்றுச்சூழலில் வருடாந்தம் சுமார் 600 மில்லியன் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கரண்டிகள் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தப் பிளாஸ்டிக் கரண்டிகள் ஒரு மாதத்திற்கு சுமார் 50 மில்லியன் பயன்பாட்டிற்குப் பிறகு சுற்றுச்சூழலுக்கு விடப்படுகின்றது.
குறிப்பாக தயிர், ஐஸ் கிரீம் போன்ற உணவுப் பொருட்களுக்காகவும், உணவு பதப்படுத்துபவர்களாலும் பிளாஸ்டிக் கரண்டிகள் பெரும்பாலும் நுகர்வோருக்கு வழங்கப்படுவதாகவும், இவை சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துக்கிறது.
மேலும் இதே அளவு பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களும் சுற்றுச்சூழலுக்கு பயன்பாட்டிற்கு விடப்படுகின்றது.
ஆகையால் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.