ஈரான் கப்பல் தாக்குதல் தொடர்பில் முக்கிய தகவல் வெளியானது ; எச்சரிக்கையால் தந்தைக்கு சென்ற அழைப்பு
ஈரான் கப்பலை தாக்கும் முன் 2 முறை அமெரிக்கா எச்சரித்துள்ளதாகவும் கப்பலை விட்டு விட்டு வெளியேறுங்கள் என ஊழியர்களுக்கு அமெரிக்க படைகள் எச்சரித்து உள்ளன என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28ந் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

கடும் கண்டனம்
இந்நிலையில், இந்திய பெருங்கடலில் இருந்த ஈரான் போர்க்கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று கடலுக்கு உள்ளே இருந்து குண்டுவீசி கடுமையாக தாக்கியது. அந்த கப்பலை, அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி கூறும்போது, சர்வதேச நீர்வழிகளில் எந்தவித எச்சரிக்கையும் தெரிவிக்காமல் அமெரிக்க படைகள் அராஜகத்துடன் நடந்து கொண்டுள்ளன என கூறினார்.
இந்த நிலையில், ஈரான் அரச செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ஈரானின் கப்பலில் இருந்த ஊழியர் ஒருவர், அவருடைய தந்தையிடம் இதுபற்றி பேசியுள்ளார். அதில், ஈரான் கப்பலை தாக்கும் முன் அமெரிக்கா 2 முறை எச்சரித்தது என கூறியுள்ளார். கப்பலை விட்டு விட்டு வெளியேறுங்கள் என ஊழியர்களுக்கு அமெரிக்க படைகள் எச்சரித்து உள்ளன என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
ஆனால், ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சியோ சர்வதேச நீர்வழிகளில் எந்தவித எச்சரிக்கையும் தெரிவிக்காமல் அமெரிக்க படைகள் நடந்து கொண்டுள்ளன என கூறினார். இந்த சூழலில், ஈரான் செய்தி நிறுவனத்தின் தகவல் அதற்கு முரணான விடயங்களை வெளியிட்டு உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.