இலங்கை நிலைகுறித்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன் அமெரிக்க இராஜாங்க செயலாளர் பேச்சு
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கை நெருக்கடி குறித்து விவாதித்ததாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் (Antony Blinken) தெரிவித்துள்ளார்.
கம்போடிய தலைநகரில் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தபோதே இலங்கை குறித்து விவாதித்ததாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் உக்ரைன் மீதான் ரஸ்யாவின் போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இலங்கையின் அரசியல் பொருளாதார நிலை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக பிளிங்கென் (Antony Blinken) தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
கம்போடியாவில் இடம்பெறும் ஆசியாவின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பிற்கு முன்னதாகவே இருவரும் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் முதலில் கருத்து தெரிவித்த அன்டனி பிளிங்கென் (Antony Blinken) இந்தோ பசுபிக்கில் ஆசியாவின் மையத்தன்மைக்கு இந்தியாவும் அமெரிக்காவும் வலுவான ஆதரவாளர்கள் என குறிப்பிட்டார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாங்கள் ஆசியாவின் மையத்தன்மையின் வலுவான ஆதரவாளர்கள் என தெரிவித்துள்ள பிளிங்கென் (Antony Blinken) சுதந்திரமான இந்தோ பசுபிக் குறித்த நாங்கள் ஒன்றாக பகிரப்பட்ட பார்வையை கொண்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும் பல்வேறு வழிகளில் நாங்கள் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மியன்மாரின் தற்போதையய நிலைமை உட்பட சில பகுதிகளில் நாங்கள் உடனடி சவால்களை எதிர்கொண்டுள்ளோம் என தெரிவித்த அவர் (Antony Blinken) இது குறித்து கரிசனைகொண்டுள்ளோம் எனவும் கூறினார்.
அத்துடன் தன்னுடைய நண்பருடன் இந்த விவகாரங்கள் குறித்து நான் மீண்டும் ஆராயவுள்ளேன் அதன் பின்னர் நாங்கள் கூட்டத்திற்கு செல்வோம் என பிளிங்கென் (Antony Blinken) தெரிவித்துள்ளார்.
அதேசமயம் நான்சி பெலோசியின் (Nancy Pelosi) தாய்வான் விஜயத்திற்கு பின்னர் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்தும் இருவரும் ஆராய்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.