அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோவிட தொற்று
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
81வயதான பைடனிற்கு கொரோனாவிற்கான சிறிய அறிகுறிகள் தென்படுகின்றனஇதற்கான மருந்தினை வழங்கியுள்ளோம் என அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நான் நன்றாக உணர்கின்றேன் என மருந்தினை பயன்படுத்திய பின்னர் பைடன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நோய்கள்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் வழிகாட்டல்களிற்கு அமைய பைடன் டெலெவெயரில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஜோ பைடன் கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளமை அவரது ஆதரவாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.